Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
Akilan R
akilan27 at gmail.com
Sat Aug 7 00:27:02 IST 2010
இயக்கிகளை மறந்துவிடுங்கள்புதிய வன்பொருட்கள், மிக சிறியன உட்பட,
குறுந்தகட்டுடனேதான்
வருகின்றன. அதில் இயக்கி என்றொரு மென்பொருள் இருக்கும். அதனை பதிந்தால்தான்
வின்டோஸ் உங்கள் வன்பொருளை அடையாளம் கண்டுகொள்ளும்.
அதற்கு குறுந்தகட்டை சொருகி, நிறுவுதல் மாயக்காரனை இயக்கி, காத்திருந்து
குறுந்தகட்டை வெளியெடுத்து கணினியை
மறுதொடக்கு<http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&action=edit&redlink=1>செய்யுங்கள்
.
வன்பொருளை வாங்கி சில காலம் ஆகியிருந்தால் குறுந்தகட்டை மறந்து
விடுங்கள். இயக்கியின்
புதிய பதிப்பினை வன்பொருள் உற்பத்தியாளர் வலைதளத்திலிருந்து (தேடி கண்டுபிடிக்க
முடிந்தால்) பதிவிறக்கி, ரீப்பீட்.
சரி. இதெல்லாம் ஒரு வன்பொருளுக்கு மட்டுமே. உங்கள் ஒளி, ஒலி அமைப்புகள், சுட்டி,
விசைப்பலகை என அனைத்திற்கும் மறுபடி மறுபடி ரீப்பீட். வின்டோஸை நிறுவிய நீண்ட
தலைவலி போதாது என்று இது வேறு. :-(*
லினக்சுக்கு தனியே இயக்கிகள் தேவையில்லை**.* தேவையான எல்லா இயக்கிகளும் கெர்னல்
உடனேயே வருகின்றன. இதனால் நமக்கு கிடைப்பவை:
-
*வெகு வேகமான மற்றும் தனித்தியங்க்கூடிய நிறுவுமுறை*. நிறுவிய உடனே நீங்கள்
வேலை செய்ய தேவையான அனைத்தும் கிடைக்கின்றது.
-
*இனைத்ததும் வேலை செய்யும்* உதிரி பாகங்கள்.
-
*குறைந்த மாசு**: *குறுந்தகடுகளை தர வேண்டாமே. :-)
--
@மா.சி: தவறுகள் இருப்பின் திருத்தி மனு கானெட்டுக்கு அனுப்புங்கள்.
--
*அகிலன்*
(http://www.coding-aviator.blogspot.com<http://www.coding-aviator.blogspot.com>
)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100807/b7243cd1/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list