[Ilugc.tamil] தமிழ் மடற்குழுவில் என்னென்ன செய்யலாம்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Thu Jul 22 20:18:42 IST 2010
புதிதாக மடற்குழு ஆரம்பித்து அதில் என்ன பேசப் போகிறோம் என்று ஒரு கேள்வி
எழுந்தது. குறிப்பிடத்தக்க மடல் பரிமாற்றம் ஏற்பட சில நோக்கங்களை
வரையறுத்துக் கொண்டால் பலனுள்ளதாக இருக்கும்.
1. ilugc ஆங்கில மடற்குழுவில் அனுப்பப்படும் பயனுள்ள தகவல்களை தமிழில்
இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
2. உங்களுக்குத் தெரியுமா?
லினக்சு கட்டளைகள்!
கட்டற்ற மென்பொருள் வரிசை
என்று கட்டற்ற மென்பொருட்களை பற்றிய குறிப்புகளை தொடர்களாக அனுப்பலாம் -
3. கட்டற்ற மென்பொருட்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடலாம்,
ஈடுபட மற்ற உறுப்பினர்களை அழைக்கலாம்.
அ. கேடிஈ பணிச்சூழல் - http://i18n.kde.org/stats/gui/stable-kde4/team/ta/
ஆ. க்னோம் பணிச்சூழல் - http://l10n.gnome.org/teams/ta
இ. மோசில்லா - https://wiki.mozilla.org/L10n:Teams:ta
ஈ. ஓப்பன் ஆஃபிஸ் - http://ta.openoffice.org/
இன்னும் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள் தமிழ் இடைமுகம், தமிழ் கையேடு
உருவாகக் காத்திருக்கின்றன.
4. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளலாம்.
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list