[Ilugc.tamil] அக்கம் பக்கம்..

ஆமாச்சு ramadasan at amachu.net
Thu Jul 22 21:29:48 IST 2010


வணக்கம்

ஐ லக்சிக்கென தமிழ் மடலாடற் குழு ஏற்படுத்திக் கொடுத்த பேரா. ஸ்ரீராமிற்கு நன்றிகள். அக்கம் பக்கத்தில் இருக்கக் கூடிய கட்டற்ற தமிழ்க் கணிமைத் 
தொடர்பான மடலாடற் குழுக்களை அறிந்து வைத்திருப்ப்பது நல்லது.

முகுந்த் அவர்களின் தொடர்ச்சியான பராமரிப்பில் இயங்கும் பிரி தமிழ் கம்ப்யூட்டிங் மடலாடற் குழு -  
http://groups.google.com/group/freetamilcomputing

உபுண்டு தமிழ்க் குழும மடலாடற் குழுக்கள் - https://lists.ubuntu.com/archives/ubuntu-tam & 
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam

பெடோரா தமிழ் விருப்ப மடலாடற் குழு - https://admin.fedoraproject.org/mailman/listinfo/tamil-
users

டெபியன் தமிழ் மடலாடற் குழுவிற்கான கோரிக்கை பலரின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறது - http://bugs.debian.org/cgi-
bin/bugreport.cgi?bug=585501, 585501 at bugs.debian.org என்ற முகவரிக்கு மடல் எழுதி உங்கள் ஆதரவை 
தெரிவிக்கலாம்.

இவை ஏன் என்றால்?

கட்டற்ற மென்பொருள்கள் தமிழில் உருவாக்கப்படும் போது பயனர்களுக்கு அவை பிரபலமான இயங்குதளங்களின் வாயிலாக வழங்கப்படுதல் உத்தமம். அவ்வகையில் 
பெடோராவிற்கும் டெபியனிற்குமான பைனரி செய்து மென்பொருள் களஞ்சியத்தில் சேர்ப்பதே சிறந்த வழி. இவற்றைக் கருத்தில் கொண்டும் இதுபோன்ற ஏனைய துணைக்காரணங்களுமே 
இவற்றினை தொடங்குவதற்கான அடிப்படை நோக்கம். அம்மடலாடற் குழுக்கள் அவற்றை பற்றி விவாதிக்க களஞ்சியத்தில் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.

இவை தவிர http://tech.groups.yahoo.com/group/tamilinix/ குழுவும் செயற்பாட்டில் இருந்துள்ளது. வேறு இருப்பின் 
பகிர்ந்து கொள்ளவும்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list