[Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 22 22:00:45 IST 2010


விண்டோசு பயன்படுத்துபவர்களை லினக்சுக்கு மாறச் சொல்லிக் கேட்கும் போது,
பயன்படுத்தும் வாதங்களில் பலவற்றைத் தொகுத்து ஒரு இணையத் தளமாகக்
கொடுத்துள்ளார், மனு கானெட் என்பவர்.

http://www.whylinuxisbetter.net/

இந்த தளத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் வசதி செய்திருக்கிறார்.
தமிழில் சில பக்கங்களை மொழி மாற்றியிருக்கிறேன்.

1. தலைப்பு
2. முதல் பக்கம்
3. பழைய கணினிக்கு புத்துயிர்
4. எல்லா பயன்பாடுகளும் ஒரே நிறுவலில்
5. அமரோக்
6. ரகசியமாக தகவல் களவுகள்
ஆகிய பக்கங்களை மொழி பெயர்த்திருக்கிறேன்.

(இன்னும் 30 பக்கங்கள் இருக்கின்றன, ஏதாவது ஒரு பக்கத்தை மொழி பெயர்க்க
விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்).
இன்னும் இருப்பவை

7. வைரஸ் தொல்லை இனி இல்லை
8. உங்கள் கணினி சொதப்பிக் கொண்டிருக்கிறதா?
9. லினக்சு உங்கள் கணினியைப் பாதுகாக்கிறது
10. கணினியின் மென்பொருளுக்கு 10,000 ரூபாய் செலவழிக்காதீர்கள்.
11. சுதந்திரம்!
12. தனி CD மென்பொருட்களை மறந்து விடலாம்
13. எல்லா மென்பொருட்களையும் ஒரே கிளிக்கில் புதுப்பியுங்கள்
14. இலவசமாக கிடைக்கும் போது எதற்கு மென்பொருளை சட்ட விரோதமாக பயன்படுத்த வேண்டும்
15. புது மென்பொருள் வேண்டுமா?? தேடி அலைய வேண்டாம், லினக்சு
உங்களுக்காகத் தேடிக் கொண்டு வரும்
16. நாளைய பணிச்சூழல் இன்றைக்கே!
17. உங்கள் கணினி தகவல்கள் சிதறிக் கிடக்கின்றனவா?
18. பணிச் சூழல் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுங்கள்
19. திருடர்கள் திக்கற்றுப் போகட்டும்
20. விண்டோஸ் ஏன் போகப் போக மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது?
21. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவுங்கள்
22. இலவச, முழுமையான உதவி கிடைக்கிறது.
23. நிறைய சாளரங்களைப் பயன்படுத்த வேண்டுமா? பணித் தளங்களைப் பயன்படுத்துங்கள்
24. உங்கள் ஸ்டார்ட் மெனுவில் குளறுபடிகளைத் தவிருங்கள்
25. மென்பொருள் பிழைகள் சரிசெய்யப்பட பல ஆண்டுகள் காத்திருக்கத்
தேவையில்லை. நீங்கள் எடுத்துச் சொல்லி, சரி செய்து கொள்ளுங்கள்
26. கணினியை restart செய்து சலித்து விட்டீர்களா?
27. நூற்றுக்கணக்கான இலவச விளையாட்டுக்கள் கிடைக்கின்றன.
28. உங்கள் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் உதவி செய்யுங்கள்
29. MSN, AIM, ICQ, Jabber எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பயன்படுத்துங்கள்.
30. பருவநிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்,
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list