[Ilugc.tamil] [புறம்] செய்தி - எல்காட் மடிக்கணினி புகழ் உமாசங்கர் சிக்கலில்

சிவகுமார் மா masivakumar at gmail.com
Fri Jul 23 03:49:08 IST 2010


திரு உமாசங்கர் அரசியல் காரணங்களால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=11032&id1=4

A.

2001ம் ஆண்டின் இறுதியில் ஒரு நண்பரின் தொடர்பில் திரு உமாசங்கரை
நந்தனத்தில் இயங்கி வந்த ஒரு மென்பொருள் அலுவலகத்தில் சந்தித்தேன்.

1. அப்போது அவர் அரசு நிர்வாகத்தில் பொறுப்பு எதுவும் கொடுக்கப்படாமல்
வைக்கப்பட்டிருந்தார். நாங்கள் கொண்டு போயிருந்த லினக்சு முதலான
விபரங்களை ஆர்வமாகப் பார்த்தார்.

2. திருவாரூரில் கணினி மயமாக்கலுக்காக தான் செயல்பட்டதை குறிப்பிட்டார்.
மென்பொருள் உருவாக்கத்துக்காக தனியாக ஒரு குழு உருவாக்கி அதனுடன் பல மணி
நேரம் செலவழித்ததைச் சொன்னார்.

3. தமிழக நிர்வாகப் பணியிலிருந்து மாற்றம் பெற்று மத்திய சேவைக்குப்
போவது கூட ஒரு வழியாக இருந்தாலும், முடிந்த வரை தமிழ்நாட்டிலேயே போராடிப்
பார்த்து விடுவது என்று முடிவு செய்திருப்பதாகச் சொன்னார்.

4. பிஎஸ்என்எல்லின் WLL சேவை மூலம் குறைவான கட்டணத்தில் செல்பேசி
சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று தன் கையில் வைத்திருந்த ஒரு கருவியைக்
காட்டினார்.

B.
அவர் எல்காட் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த போது மைக்ரோசாப்டின்
ஏகபோகத்தை உடைத்து எல்காட் அலுவலகத்திலும் மற்ற அரசு துறைகளிலும்
திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்த கொள்கை முடிவை செயல்படுத்தினார்.

1. அது தொடர்பான ஒரு காணோளி
http://www.youtube.com/watch?v=3_g72GcaIdc

இதற்கான பின்னூட்டங்களில் உமாசங்கர் பதில் கூட அளித்திருக்கிறார்.

2. சென்னை லினக்சு பயனர் குழுவின் தன்னார்வலர்களை அழைத்து தமிழகம்
எங்கும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து திட்டங்கள்
தீட்டினார்.

3. தமிழக பள்ளிகளுக்கு கணினி வினியோகிக்கும் போது இலவசமாக கிடைக்கும்
திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு
சேமித்தார்.

4. மடிக்கணினி நிறுவனங்களுடன் பேசி, தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை
சந்தை விலையை விட பாதி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

5. என்னுடைய நண்பர் ஒருவரின் (அரசுத் துறையில் பொறுப்பான பதவியில்
இருப்பவர்) கருத்துப்படி, உமாசங்கரின் முனைப்பான நடவடிக்கைகளால் அரசு
துறைகளில் கணினி பயன்பாட்டில் ஆக்கபூர்வமான விழிப்புணர்வு
ஏற்பட்டிருக்கிறது.

http://kusumbuonly.blogspot.com/2010/07/httpwww.html
http://www.vinavu.com/2010/07/17/uma-shankar-ias/

அன்புடன்,
மா சிவகுமார்


More information about the Ilugc.tamil mailing list