[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Fri Jul 23 09:21:34 IST 2010


1. உங்கள் பழைய கணினிக்கு புத்துயிர் கொடுங்கள்

விண்டோசின் புதிய பதிப்புகளைப்  (95, 98, 2000, Me, XP, etc.) பயன்படுத்த
மேலும் மேலும் கணினி சக்தி தேவைப்படுகிறது. விண்டோசைத் தொடர்ந்து
பயன்படுத்த விரும்பினீர்களானால், உங்கள் கணினியையும் புதுப்பித்துக்
கொண்டே இருக்க வேண்டும்.

அதிக திறனுள்ள கணினி தேவைப்படும் பணி செய்பவர்கள் புதிய கணினிகள்
வாங்கிக் கொள்ளட்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, இணையம், மின்னஞ்சல்,
கடிதம் எழுதுவது என்று கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு, இரண்டு மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கணினி ஒன்றை வாங்க தேவையே இல்லை? கணினி
நிறுவனங்கள் காசு சம்பாதிப்பது மட்டும்தான் நடக்கிறது.

5 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கணினி இன்றைக்கும் ஏன்
பயன்படக்கூடாது என்று யோசித்துப் பாருங்கள்!

பழைய கணினிகளில் லினக்சு நன்றாகவே இயங்கும். விண்டோஸ் XP நிறுவக் கூட
முடியாத கணினிகளில் கூட லினக்சைப் பயன்படுத்தலாம். 12 வருடங்களுக்கு
முன்பு வாங்கிய கணினியில் லினக்சு போடுவதால் ஒரு சூப்பர் கணினி கிடைத்து
விடாதுதான். ஆனால், தினசரி வேலைகளுக்கு அது தாராளமாக போதும்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list