Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Fri Jul 23 14:49:45 IST 2010


23 ஜூலை, 2010 1:02 pm-ல், ben <benhur.pm at gmail.com> எழுதியது:
>
> Windows 7 வரவிற்கு பிறகு விண்டோஸ் பணிச்சூழல்  ஏகத்துக்கும் முன்னேறி இருப்பதை
> நீங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். Windows 7 மற்றும்  Mac OS X
> Snow Leopard போன்ற புது தளங்களுடன் போட்டி போட லினக்ஸ் புது காரணங்களை தேட
> வேண்டும்.

நீங்கள் சொல்வது மிகவும் உண்மை, பென்.

மேசைக் கணினியில் விண்டோசின் ஆதிக்கத்தை நேரடியாக முறிப்பது நடக்காமல்
போகலாம், ஆனால் போட்டி புதுக் கருவிகளில் புது பயன்பாடுகளில் நீள்கிறது.

மொபைல் இயங்கு தளங்களில் கூகுளில் ஆண்ட்ராய்ட் (Android), நோக்கியாவின்
மேமோ (Maemo) இரண்டுமே லினக்சை சார்ந்து உருவாக்கப்படுகின்றன. இன்னொன்று
ஆப்பிளின் ஐஃபோன்.

மேசைக் கணினி, மடிக் கணினிகளிலும் உபுண்டு போன்று ஆண்டுக்கு இரண்டு
வெளியீடு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நீண்ட கால வெளியீடு என்று
செயல்படும் இயங்குதளங்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப வேகமாக செயல்பட
முடியும்.

வரும் அக்டோபரில்  உபுண்டு 10.10 வெளியீட்டில் யூனிடி (unity) என்ற
பதிப்பு கிடைக்கவுள்ளது. 10 விநாடிகளுக்குள், கணினி இயங்கி, இணையத்தைப்
பயன்படுத்த முடிகிற பதிப்பு இது.

http://www.markshuttleworth.com/archives/383

ஏற்கனவே விண்டோசு இருக்கும் கணினியில், உபுண்டு இரட்டைத் தள முறையில்
(dual boot) இடம் பிடிக்க பயனுள்ளதாக இருக்கும். 'வழக்கமான பணிகளுக்கு
உங்களுக்கு பழக்கமான விண்டோசு வைத்துக் கொள்ளுங்கள், மின்னஞ்சல் பார்க்க
வேண்டும், இணையத்தில் செயல்பட வேண்டும் என்று கணினியை இயக்கும் போது
உபுண்டு யூனிட்டியைத் தேர்ந்தெடுங்கள். 10 செகண்டுகளுக்குள் இணையத்தில்
செயல்பட ஆரம்பிக்கலாம்.'


Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list