[Ilugc.tamil] வணக்கம்
selva gmail
selva.al.raj at gmail.com
Sat Jul 24 12:07:17 IST 2010
வணக்கம் உறவுகளே.
நான் செல்வா.
புதிதாக இந்தக் குழுமத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.
இது தான் முதல் முறை இத்தகைய ஒரு குழுமத்தில் நான் இணைவது.
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்க முடியும் என எண்ணுகிறேன்.
அன்புடன்,
செல்வா.
From: ilugc.tamil-bounces at ae.iitm.ac.in [mailto:ilugc.tamil-bounces at ae.iitm.ac.in] On Behalf Of Vannia Rajan
Sent: Saturday, July 24, 2010 9:00 AM
To: தமிழ் குழுமங்கள்
Subject: [Ilugc.tamil] தமிழ் படிக்கும் பழக்கத்தை வளர்த்தல்
வணக்கம்
நான் ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை எதுவெனில் - என்னால் சரளமாக தமிழ் புத்தகம் மற்றும் கதை/கட்டுரைகளை படிக்க முடியாது (ஆங்கிலம் படிக்கும் வேகத்தில் என்னால் தமிழ் படிக்க இயலவில்லை). பேச்சு வழக்கில் தமிழ் ஓங்கி நின்றாலும் எழுத்து வழக்கில் எனக்கு ஆங்கிலமே..
சிறு பிள்ளைகளுக்கான வார்த்தை விளையாட்டு-மென்பொருள் தொட்டு பரவலாக ஆங்கிலமே கணிணி உலகிமெங்கும் வலம் வருகிறது. நம் காவியங்கள் / கவிதைகளுக்கு புத்துயிர் அளித்து அவற்றை அனைவரும் எளிதில் தாங்கள் விரும்பிய "Electronic Gadget"ல் புதிய வடிவில் விளையாட்டாக படித்து வருவதற்கான வாய்ப்புகள் வளர்ந்தால் தமிழ் படிக்கும் பழக்கம் வளர வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து..
தமிழ் படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேறு சிறந்த முறை இருக்கும் - அதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. குறிப்பாக கணிணி சம்பந்தப்பட்ட இடங்களில் தமிழ்க்காவியங்கள் பயில உள்ள எளிய வழிமுறைகள்?
(மேலும் - இதுபோன்ற அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கான நிபுணர் கருத்துக்களை ஒரே இடத்தில் படித்து தெரிந்துகொள்ள ஏதேனும் Website உள்ளதா? - விகீபீடியாவினைப் பயன்படுத்தலாமா?)
பின்குறிப்பு - <http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=> தமிழ் வளர்த்தல் (கூகிள் தேடல்) - <http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=> தமிழ் காவியங்கள் - கூகிள் தேடல் - போன்ற தேடல்கள் சரியன தகவல்களைத் தருவதாகத் தென்படவில்லை..
http://ta.wikipedia.org/wiki/ <http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D> முதற்_பக்கம் - இது நல்ல ஆம்பம் போல் தெரிகிறது
--
நன்றி,
கா.வன்னிய ராஜன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100724/82b23889/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list