[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Sun Jul 25 09:49:23 IST 2010


2. அப்பச்சே என்று அறியப்படும் இணைய வழங்கி (http server), அப்பச்சே
அறக்கட்டளையின் நூற்றுக்கணக்கான மென்பொருள் திரட்டுகளில் ஒன்றுதான்.
இதைத் தவிர 75 மென்பொருள் பயன்பாடுகள் அப்பச்சே அறக்கட்டளையின் கீழ்
உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன.

சப்வெர்ஷன் - மென்பொருள் நிரல் மேலாண்மை, ஸ்பேம் அசாசின் - குப்பை
மின்னஞ்சல்கள் வடிகட்டி, ஜாவா தொடர்பான பயன்பாடுகள், பெல் (perl)
தொடர்பான பயன்பாடுகள் என்று பல மென்பொருட்கள் இதில் அடங்கும்.

http://apache.org/

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list