[Ilugc.tamil] தமிழில் ஹலோ வேர்ல்ட் நிரலைக் கூட தேடிப் பிடிப்பது சிரமமாய் இருக்கிறது.
ஆமாச்சு
ramadasan at amachu.net
Sun Jul 25 10:44:08 IST 2010
On Sunday 25 Jul 2010 10:27:23 am Rajkumar NRS wrote:
> *எதிரொலி:* திறமூல டெக்ஸ்ட் டு ஸ்பீச்(அண்ணா பல்கலை)மூல நிரலை எங்கு
> பதிவிறக்கலாம்?
>
அண்ணா பல்கலைக் கழகம் மட்டுமல்ல மற்ற எந்தவொரு பல்கலைக்கழகத் திட்டமும் அரசின் (மினிஸ்டிரி ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற அமைச்சகங்கள்)
நிதியுதவி பெற்றே செய்யப்படுகின்றன.
ஆகையால் அதன் உடைமையாளராக அந்த பல்கலைக்கழகங்கள் இருப்பதில்லை. ஆகையால் அவற்றை வெளியிட நிதியளித்தவரின் முடிவு முக்கியமாகிறது.
தாங்கள் டெக்ஸ்ட் டு ஸ்பீச் பற்றி கேட்டீங்க.
த்வனி என்ற திட்டமும் - பங்களூரு (?) இந்திய அறிவியல் கழகத்தின் பேரா. ராமகிருஷ்ணனின்(?) படைப்பொன்றும் கட்டற்று கிடைக்கப்பெறுகிறது.
http://mile.ee.iisc.ernet.in/mile/Publications/SpeechProcessing.html
http://dhvani.sourceforge.net/
http://code.google.com/p/text-to-speech/
கோவை மாநாட்டுக் கண்காட்சியில் இவரது அணியினர் கையெழுத்து உணரும் சாதனத்தையும் விளக்கிக் காட்டினார். ஆனால் அது கட்டற்று கிடைப்பதில்லை.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list