[Ilugc.tamil] கடந்த வாரத்தில்...

ramadasan at amachu.net ramadasan at amachu.net
Sun Jul 25 12:28:07 IST 2010


வணக்கம்,

ஒவ்வொரு ஞாயிறன்றும் கட்டற்ற கணிமை தொடர்பாக பலரும் மேற்கொள்ளும் பணிகளை தொகுத்து "கடந்த வாரத்தில்" என்ற தலைப்பில் இங்கே வழங்கவிருக்கிறேன். 
கூடுமானவரை இது தமிழ்க் கணிமை தொடர்பாகவும் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தொகுப்பாகவும் இருக்கும். ஆனால் இப்படித்தான் என்று இல்லை. 

கண்ணில் படும் விஷயங்களை திரட்டிவிருகிறேன். உங்களிடையே அப்படி பகிர்ந்து கொள்ள விஷயங்கள் இருந்தால், இதே மடலுக்கு பதிலாக அதனைத் தெரிவிக்கவும். 
மாறாக முன்னதாவவே எனக்கு தனி மடலில் தெரிவியுங்கள்.

சரி கடந்த மாதத்திற்கு போகலாம்: (இந்த தடவை மட்டும் மாதம்னு இருக்கட்டும்)

1) குனு இணைய தள தமிழாக்க முயற்சிகள் மீண்டும் துளிர் பெற்றுள்ளன. பூமாலைராஜ், சுதன் ஆகியோரது பங்களிப்பில் புதிதாக இரண்டு முக்கிய பக்கங்கள் 
தமிழாக்கம் பெற்றுள்ளன. முறையே,

குனு உரிமங்களை உங்களுடைய சொந்த மென்பொருளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது - http://www.gnu.org/licenses/gpl-
howto.ta.html
கட்டற்ற மென்பொருள் அமைப்பு ஏன் பங்களிப்போரிடமிருந்து காப்புரிமையை அளிக்கக் கேட்கிறது - http://www.gnu.org/licenses/why-
assign.ta.html

2) சென்னையின் இந்திய லினக்ஸ் பயனர் குழுவின் சென்னை கிளைக்கு தமிழ் மடலாடற்குழு உருவாக்கப்பட்டுள்ளது - 
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil 

தொடங்கிய முதல் வாரத்தில் இக்குழுவானது அறுபத்து ஆறு உறுப்பினர்களை பெற்றுள்ளது. இவ்வாரத்தில் ரூபி ஆன் ரெயில்ஸ், அகல் விளக்கு 108, ஏன் லினக்ஸ் 
பயன்படுத்த வேண்டும், லினக்ஸ் டெர்மினல் செர்வர் கிளையன்ட்  போன்ற முக்கிய உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தொடரும்...

--

ஆமாச்சு



More information about the Ilugc.tamil mailing list