[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Sun Jul 25 19:29:12 IST 2010
10. கணினியில் மென்பொருளுக்கு 10,000 ரூபாய் செலவழிக்காதீர்கள்!
(அல்லது சட்ட விரோதமாக திருட்டுப் பிரதியை பயன்படுத்தாதீர்கள்!)
"ஆகா, நான்தான் விண்டோசுக்கு காசு கொடுக்கலையே" என்று நீங்கள்
நினைக்கலாம். அது உண்மைதானா என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?
நீங்கள் கணினி வாங்கும் போதே விண்டோசு நிறுவப்பட்டு வந்திருந்தால்
அதற்காக உங்கள் காசு எடுக்கப்பட்டிருக்கிறது. கணினி விற்பவர் உங்களிடன்
அதைத் தனியாகச் சொல்லவில்லை, அவ்வளவுதான். விண்டோசு உரிமத்துக்கான
செலவு, பொதுவாக ஒரு கணினியின் விலையில் நான்கில் ஒரு பங்காக இருக்கிறது.
விண்டோசு திருட்டுப் பிரதியை பயன்படுத்தினால் ஒழிய, நீங்கள் அதற்காக
உங்கள் காசு செலவாகியிருக்கிறது. (மைக்ரோசாப்டுக்கு எங்கிருந்து இவ்வளவு
காசு வருகிறது என்று நினைக்கிறீர்கள்?)
லினக்சு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. உலகமெங்கிலும் உள்ள
ஆயிரக்கணக்கான பேர் கடினமாக உழைத்து, அழகான, அருமையான, சிறப்பான கணினி
மென்பொருள் ஒன்றை உருவாக்கி, அதை எல்லோரும் பயன்படுத்துவதற்கு இலவசமாகக்
கொடுக்கிறார்கள். ("இவங்க ஏன் இப்படி ஓசியில தரணும்" என்று உங்களுக்கு
தோன்றினால், ilugc.tamil at ae.iitm.ac.in என்ற மடற்குழுவில் சேர்ந்து
கேளுங்கள், முழு விபரங்களும் கிடைக்கும்).
சில வணிக நிறுவனங்கள் லினக்சு பயன்படுத்த உதவி, பயனர் கையேடு, தொலைபேசி
உதவி போன்ற சேவைகளை சேர்த்து தமது பெயர் பொறித்த லினக்சு பொதி
விற்கிறார்கள், வேண்டியவர்கள் காசு கொடுக்கலாம். ஆனால், நம்மைப் போன்ற
பெரும்பாலானோர்க்கு, ஒரு பைசா செலவில்லாமல் வேலை நடந்து விடும்.
(http://www.whylinuxisbetter.net/)
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list