Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Mon Jul 26 08:05:11 IST 2010


25 ஜூலை, 2010 9:18 pm-ல், Vignesh Nandha kumar <viky.nandha at gmail.com> எழுதியது:
> 15. புது மென்பொருள் வேண்டுமா?? தேடி அலைய வேண்டாம், லினக்சு உங்களுக்காகத்
> தேடிக் கொண்டு வரும்.
>
> விண்டோஸில் ஒரு புதிய மென்பொருளைப் பயன்படுத்திப் பார்க்க:
>
> உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மென்பொருளை இணையத்தில் தேடிக்
> கண்டுபிடிக்க வேண்டும்.
>
> அதனைப் தரவிறக்குவதற்கான இணையதளத்தைக் கண்டறிய வேண்டும்.
>
> விலை கொடுக்கவும் நேரலாம்.
>
> மென்பொருளைத் தரவிறக்க வேண்டும்.
>
> கணினியில் அதனை நிறுவ வேண்டும்.
>
> சில சமயங்களில் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டும்.
>
> அப்பப்பா! புதிதாக ஒன்றை பயன்படுத்திப் பார்ப்பதற்கு இத்தனை செய்ய வேண்டுமா?
>
> லினக்ஸில் எல்லாமே மிகவும் எளிது. லினக்ஸில் package manager உள்ளது. ஒவ்வொரு
> மென்பொருளும் தத்தமது பொதியில் அடக்கப்பட்டிருக்கும். புதிய மென்பொருளை நிறுவ,
> package manager-ஐ திறந்து, சில திறவுச்சொற்களைத் தட்டச்சு செய்யவும். நிறுவ
> வேண்டிய மென்பொருளைத் தேர்ந்தெடுத்து "Apply” அல்லது "OK”-வை அழுத்தவும்.
> மாறாக, ஏற்கனவே உள்ள பல்வேறு மென்பொருட்களை வகை வாரியாகவும் உலவலாம்.
>
> எனவே,
>
> இனியும் வலை உலவ வேண்டாம்
>
> இனியும் மென்பொருட்களை நீங்களே தரவிறக்கி நிறுவ வேண்டாம்
>
> புதிய மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்க்க நிறைய நேரம் கிடைக்கும்
>
>   ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
>

நல்லா இருக்கு விக்னேஷ் :-)

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list