[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Mon Jul 26 08:10:49 IST 2010
5. கலக்கலான ஒரு பாட்டுப் பெட்டி!
லினக்சில் நிறைய பாட்டுப் பெட்டிகள் கிடைக்கின்றன (அமரோக் - AmaroK,
ரிதம் பாக்ஸ் - Rhythmbox, பன்ஷி - Banshee. அவற்றில் சில உண்மையிலேயே
தூள் கிளப்புபவை.
எடுத்துக்காட்டுக்கு அமரோக் திரைக்காட்சியைப் பாருங்கள் - உங்கள்
பாடல்களை சிந்தாமல் சிதறாமல் ஓட விடுவதோடு மட்டுமில்லாமல், உங்களுக்கு
பிடித்த பாடல்களை நினைவில் கூட வைத்துக் கொள்கிறது. இணையத்தில் பாடலின்
தலைப்பும், சிடி அட்டைப் படமும் கிடைத்தால் அவற்றை தேடி கொண்டு வந்து
காட்டி விடுவதையும் செய்கிறது!
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list