[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Mon Jul 26 12:31:18 IST 2010


3. கடவுள் இல்லாத ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டம்

வெற்றிகரமான, பரவலாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களுக்குப் பின்னணியில்
ஒரு பிரபலமான நிறுவனம் அல்லது நபர் இருப்பார்கள்.

லினக்சு - லினஸ் தோர்வால்ட்சு,
மை எஸ்கியூஎல் - பல கை மாறி இப்போது ஆரக்கிள்
ஓப்பன் ஆஃபிஸ் - முன்பு சன் இப்போது ஆரக்கிள்
ஃபயர்ஃபாக்சு - மோசில்லா அறக்கட்டளை

போஸ்ட்கிரெஸ் தரவுத் தளத்துக்கு (Database) அப்படி ஒரு தலைமை நபரோ,
நிறுவனமோ, முறையான அமைப்போ கிடையாது. முழுக்க முழுக்க மடற்குழுக்கள்
மூலமாக ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.

http://www.postgresql.org/

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list