[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Tue Jul 27 08:42:09 IST 2010


5. தரவுத்தள (database) செய்கைகள் (transactions)

தகவல்கள் இப்படி சேமிக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்

எண், பெயர், கையிருப்பு
1, ராமசாமி, ரூ 750
2, கிருஷ்ணசாமி, ரூ 100

ராமசாமி கிருஷ்ணசாமிக்கு 50 ரூபாய் கொடுக்கிறார். இதன் முடிவை
தரவுத்தளத்தில் சேர்க்க வேண்டும்.

1, ராமசாமி, ரூ 700 என்று மாற்ற வேண்டும்
2, கிருஷ்ணசாமி, ரூ 150 என்று மாற்ற வேண்டும்

இந்த இரண்டு மாற்றங்களும் சேர்ந்து நடக்க வேண்டும். இரண்டும் நடந்த
பிறகுதான் மாற்றங்கள் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட வேண்டும்.

அதாவது,
ராமசாமி, ரூ 700 என்று மாற்றிய பிறகு, கிருஷ்ணசாமி, ரூ 150 என்று
மாற்றுவதற்கு முன்பு,  ஏதாவது ஒரு காரணத்தினால் (மின் தடை, பயனர்
தலையீடு), தரவுத்தளத்தின் பணி தடைபட்டு விட்டால் சிக்கலாகி விடும்.

இரண்டும் மாற்றப்பட வேண்டும், இல்லா விட்டால் இரண்டுமே மாற்றப்படக்
கூடாது.  ஒன்று மாறி இன்னொன்று மாறாமல் இருக்கக் கூடாது. இந்த மாற்றங்கள்
நடந்து முடிவது வரை மென்பொருளின் மற்ற பயனர்கள் மாற்றத்துக்கு முந்தைய
விபரங்களைத்தான் பார்க்க வேண்டும்.

தரவுத் தளத்தைப் பயன்படுத்தும் மென்பொருள் பயன்பாடுகள் இதைச் செயல்படுத்த
செய்கை (transaction) என்ற வசதியை செயல்படுத்துகின்றன.

http://en.wikipedia.org/wiki/Database_transaction

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list