[Ilugc.tamil] மடற்குழு செயல் விதிகள்
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Tue Jul 27 08:46:38 IST 2010
மடற்குழுவில் பின்பற்றும் செயல்விதிகள். நீங்கள் விரும்பும் மாற்றங்கள்,
திருத்தங்கள், நீக்கங்களை தெரிவியுங்கள். வாரம் ஒரு முறை குழுவுக்கு
நினைவூட்டலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
=================
1. இந்த மடற்குழு கட்டற்ற மென்பொருட்கள் (FOSS) தொடர்பான கணினி நுட்பம்
குறித்த கருத்து பரிமாற்றத்துக்கானது. தமிழ் படிக்க எழுதத் தெரிந்த கணினி
பயனர்கள் அனைவருக்கும் பலனளிக்கும் வண்ணம் மடற்குழுவின் பரிமாற்றங்கள்
விளங்க வேண்டும் என்பது குறிக்கோள்.
2. வணிக நோக்கிலான அஞ்சல்களுக்கு தலைப்பில் (subject) [வணிகம்] என்ற
குறியைச் சேர்க்க வேண்டும்.
3. கட்டற்ற மென்பொருட்களுக்கு நேரடி தொடர்பில்லாதவற்றைக் குறித்த
மடல்களுக்கு தலைப்பில் [புறம்] என்ற குறியை சேர்க்க வேண்டும். கட்டற்ற
மென்பொருளோடு தொடர்பில்லாத அரசியல், திரைப்படம், இலக்கியம் குறித்த
மடல்களை தவிர்க்க வேண்டும்.
4. ஒருவருக்கு பதில் எழுதும் போது, முந்தைய மடலின் தொடர்புள்ள பகுதிகளை
மட்டும் வைத்துக் கொண்டு, தொடர்புள்ள பகுதிகளுக்குக் கீழே உங்கள் பதிலைக்
குறிப்பிட வேண்டும். பதில் மடலின் மேற்பகுதியில் எழுதுவதை (top posting)
தவிர்க்க வேண்டும்.
5. முடிந்த வரை இயல்பாக புரியும் மொழியில் எழுத வேண்டும். நாகரீகமற்ற
சொற்களை தவிர்க்க வேண்டும்.
6. மடற்குழு உறுப்பினர் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது கூடாது.
7. மடலின் தலைப்பு மற்றும் உள்ளடக்கம் கூடிய வரை தமிழில் இருக்க
வேண்டும். புதிய சொற்களை அறிமுகப்படுத்தும் போது ஆங்கில இணையை அடைப்புக்
குறிக்குள் குறிப்பிட வேண்டும்.
மடல்களில் குறிப்பிடப்படும் தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொல்
தெரியவில்லையெனில் <தொகுக்கப்பட்ட அகராதியை> பார்க்கவும். அல்லது
பணிவுடன் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
8. ஒருவர் புழக்கத்தில் வந்து விட்ட சொற்களுக்கு ஆங்கிலச் சொற்களை
(தமிழில் எழுதி) பயன்படுத்தினால் இது குறித்த பொது விவாதங்களைத்
தவிர்க்கவும், தனி மடலில் அவரிடம் மேற்சொன்ன வேண்டுகோளை தெரிவிக்கலாம்.
9. தமிழில் எழுதுவதில் பிழைகள் தென்பட்டால், கற்றுக் கொண்டிருக்கும்
நபர்களைக் கிண்டல் பண்ணாமல், பிழைகளை பொறுமையாகத் திருத்தி உதவ
வேண்டும்.
தமிழ்விசை என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம்.
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list