[Ilugc.tamil] நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Tue Jul 27 08:49:00 IST 2010
1. ilugc ஆங்கில மடற்குழுவில் அனுப்பப்படும் பயனுள்ள தகவல்களை தமிழில்
இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
2. உங்களுக்குத் தெரியுமா?
லினக்சு கட்டளைகள்!
கட்டற்ற மென்பொருள் வரிசை
என்று கட்டற்ற மென்பொருட்களை பற்றிய குறிப்புகளை தொடர்களாக அனுப்பலாம் -
3. கட்டற்ற மென்பொருட்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடலாம்,
ஈடுபட மற்ற உறுப்பினர்களை அழைக்கலாம்.
அ. கேடிஈ பணிச்சூழல் - http://i18n.kde.org/stats/gui/stable-kde4/team/ta/
ஆ. க்னோம் பணிச்சூழல் - http://l10n.gnome.org/teams/ta
இ. மோசில்லா - https://wiki.mozilla.org/L10n:Teams:ta
ஈ. ஓப்பன் ஆஃபிஸ் - http://ta.openoffice.org/
இன்னும் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள் தமிழ் இடைமுகம், தமிழ் கையேடு
உருவாகக் காத்திருக்கின்றன.
4. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளலாம்.
5. slashdot.org போன்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விவாதிக்கும்
தளங்களிலிருந்து தகவல்களை தமிழில் தரலாம்.
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list