Re: [Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

Pandian R barathee at gmail.com
Tue Jul 27 12:36:28 IST 2010


கணினி சிபியூ மற்றும் நினைவக தேவைகள் அதை விடுத்து புதிய பதிப்பிற்கு மாறுதல்
என்று அத்தணையும் லினக்ஸில் எளிதாய் இருக்கிறது. நான் விண்டோஸ் 7
பயன்படுத்தியதில்லை. 2 ஜிபி நினைவகம் மற்றும் 64 பிட் 2.5 GHz சிபியூ
பெட்டியில் அனைத்து அப்ளிகேஷன்களையும் நிறுவிய பின் விஸ்தா தள்ளாடியது. அதன்
பயனாக இரட்டை பூட் உள்ள கணினியை ஒட்டு மொத்தமாக வழித்துவிட்டு உபுந்து மட்டுமே
நிறுவிவிட்டேன். எக்லிப்சுடன் சேர்ந்து வெப்லாஜிக் சர்வர் இணைந்து பட்டாசு
கிளப்புகிறது.

சமீபத்தில்  புதிய பதிப்பிற்கு அப்கிரேட் செய்ததும் ... சில மவுஷ் கிளிக்குகள்
மட்டுமே. மற்றும் 3 மணிநேரம் மட்டுமே.

லினக்சுக்கு மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ் மடலாடல் குழுமம் துவக்கியதற்கும் அதனை சிறப்பாக வழி நடத்துவதற்கும்
நன்றிகள்.


Pandian R
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free"
as in "free speech".
Proud user of Ubuntu 10.04 - 64


2010/7/26 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> முதலில் மென்பொருள் நிறுவிய பிறகு மேலும் மேலும் ஏன் மென்பொருள் தேடி,
> வாங்கி நிறுவ வேண்டும்?
>
> அ. விண்டோஸ் நிறுவுவது ஒரு தொடக்கம்தான்.
>
> புத்தம்புதிய விண்டோஸ் XP நிறுவி முடித்து கணினியில் புகுந்து விளையாடத்
> தயாராகி விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
>
> 1. உங்கள் நண்பர் மின்னஞ்சலில் PDF கோப்பு ஒன்றை இணைப்பாக அனுப்புகிறார்.
>
> "ஓ, அதைத் திறப்பதற்கு உங்களிடம் மென்பொருள் இல்லையே!"
> இணையத்துக்கு போய் அடோப் ரீடர் அல்லது இன்னொரு PDF படிக்கும் மென்பொருளை
> இறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். கணினியை ரீபூட் கூட செய்ய
> வேண்டியிருக்கும்.
>
> "அப்பாடா, இப்போ எல்லாம் அமைந்து விட்டன!"
>
> 2. "இது என்ன, இன்னொரு மின்னஞ்சல்!"
>
> .doc என்ற பின்னொட்டோடு ஒரு கோப்பு வந்திருக்கிறது. விண்டோசு இதைப்
> படிக்க முடியாது.
>
> இதைப் படிக்க வேண்டுமானால், கடைக்குப் போய் மைக்ரோசாப்டு ஆபிசு காசு
> கொடுத்து வாங்கி வரலாம், அல்லது இணையத்திலிருந்து இலவசமாகக் கிடைக்கும்
> ஓப்பன் ஆபிசு மென்பொருளை இறக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு அதை நிறுவ
> வேண்டிய பணிகள் என்று இழுத்துக் கொண்டே போகும்.
>
> 3. உங்கள் நண்பர் ஒரு படக் கோப்பையும் அனுப்பியிருக்கிறார்.
>
> அந்தப் படத்தில் நிறங்கள் சரியில்லை, ஒளி அளவும் கொஞ்சம் மாற்ற வேண்டும்.
> இப்போ போய் ஃபோட்டோஷாப் வாங்கி வரலாம் (எத்தனை ஆயிரம் ரூபாய்கள் கொட்டிக்
> கொடுக்க வேண்டும்!) இல்லை என்றால் GIMP என்ற ஃபோட்டோஷாப்புக்கு மாற்றான
> திறவூற்று மென்பொருளை இணையத்தில் தேடி தகவிறக்கி, நிறுவிப்
> பயனபடுத்தலாம்.
>
> இவ்வளவு போதும், இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும், விண்டோஸ் இயங்கு
> தளத்தை நிறுவுவது என்பது தொல்லைகளின் ஆரம்பம், இயங்கு தளத்தில் எதுவுமே
> முழுசா கிடைப்பதில்லை என்பது.
>
> இதுக்கு மாறாக, லினக்சு (உபுண்டு அல்லது மாண்ட்ரிவா அல்லது ஃபெடோரா என்று
> பலவேறு பாணியில் லினக்சு கிடைக்கிறது) நிறுவிக் கொண்டால், அதன் பிறகு
> தனியாக  தேடவோ, வாங்கவோ, நிறுவவோ தேவையில்லாமல் போய் விடும்.
>
> 1. கடிதம் எழுத, கணக்கு போட விரிதாள், படக்காட்சிகள் செய்ய, படங்கள்
> வரைய, சமன்பாடுகள், வாய்ப்பாடுகள் எழுத என்று எல்லா விதமான பணி தொடர்பான
> வேலைக்கும் மென்பொருள் பயன்பாடுகள். (ஓப்பன் ஆஃபிசு, கேஆஃபிசு,
> அபிவேர்டு)
>
> 2. இணைய உலாவிகள் (ஃபயர்ஃபாக்சு, குரோமியம், ஒபேரா, கான்கொரர்),
> மின்னஞ்சல் கருவிகள் (தண்டர்பேர்டு, எவல்யூஷன், கேமெயில்).
>
> 3. படங்களை மாற்றும் கருவி (GIMP) - ஃபோட்டோ ஷாப் அளவுக்கு பயன்கள் நிறைந்தது.
>
> 4. அரட்டைக் கருவி.
> 5. ஒளிப்படம் காட்டும் கருவி
> 6. இசை ஒலிக்கும் கருவி மற்றும் பாடல்களை சேர்த்து வைக்கும் கருவி
>
> 7. பிடிஎஃப் படிக்கும் மென்பொருள்
> 8. கோப்பு தொகுப்புகளை (ZIP போன்றவை) விரிக்க உதவும் கருவிகள்.
> இன்னும் பல.
>
> லினக்சு நிறுவிக் கொண்டால் நேராக உங்கள் வேலையை செய்ய ஆரம்பிக்கலாம்.
>
> Ma Sivakumar
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/55dfec37/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list