Re: [Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Tue Jul 27 12:55:31 IST 2010
27 ஜூலை, 2010 12:36 pm-ல், Pandian R <barathee at gmail.com> எழுதியது:
> சமீபத்தில் புதிய பதிப்பிற்கு அப்கிரேட் செய்ததும் ... சில மவுஷ் கிளிக்குகள்
> மட்டுமே. மற்றும் 3 மணிநேரம் மட்டுமே.
உண்மை. உபுண்டு 9.04லிருந்து 10.04 மேம்படுத்த நீங்கள் சொன்னது போல சில
கிளிக்குகள், 3 மணி நேர இணைய இணைப்பு மட்டும்தான் தேவைப்பட்டது. மூன்று
கணினிகளில் எந்த சிக்கலும் இல்லாமல் மேம்படுத்திக் கொண்டேன்.
> லினக்சுக்கு மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.
:-)
> தமிழ் மடலாடல் குழுமம் துவக்கியதற்கும் அதனை சிறப்பாக வழி நடத்துவதற்கும்
> நன்றிகள்.
ஆரம்பித்து விட்டோம்! ஆனால், மாணவர்களும் மற்ற கணினி பயனர்களும் தமிழில்
கேள்விகள் கேட்டு கணினி பற்றி அறிந்து கொள்ள ஒரு களமாக இந்தக் குழுவை
உருவாக்கி தொடர்ந்து நடத்திச் செல்ல நம்மில் பலர் முனைப்பாக செயல்பட
வேண்டும்.
இப்படி ஒரு குழுமம் இருக்கிறது என்ற தகவலை பரவலாக தெரியச் செய்ய வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list