[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Tue Jul 27 18:03:53 IST 2010


5. பிஎச்பியில் "வணக்கம் தமிழா!" (hello world!)

அ. முன் தயாரிப்புகள்

1. அப்பச்சே இணைய வழங்கியும் அதனுடன் செயல்படும் பிஎச்பி தொகுப்பும்
நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
2. .php என்று முடியும் கோப்புகளை பிஎச்பி மூலம் கையாளும்படி இணைய வழங்கி
வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. .php என்ற பின்னொட்டோடு கூடிய கோப்பு ஒன்றை இணைய வழங்கியின் வேர்
அடைவிற்கு கீழே சேர்த்து விட்டால் அதிலிருக்கும் கட்டளைகளை பிஎச்பி
செயல்படுத்தி அனுப்பும்.

http://www.php.net/manual/en/install.php
இதற்கான குறிப்புகளை அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

ஆ. பிஎச்பியில் வணக்கம் தமிழா நிரல் எழுதுதல்.

1. வணக்கம்.php என்ற கோப்பில் கீழ்க்காணும் நிரலை எழுதுங்கள்
<html>
 <head>
  <title>பிஎச்பி சோதனை ஓட்டம்</title>
 </head>
 <body>
 <?php echo '<p>வணக்கம் தமிழா</p>'; ?>
 </body>
</html>

2. இந்தக் கோப்பை இணைய வழங்கியின் வேர் அடைவில் அல்லது அதற்குள்ளான துணை
அடைவுகளில் சேமித்து, உங்கள் உலாவியில் இணைய வழங்கி வழியாக கோப்பை
அணுகுங்கள்.

உதாரணமாக : http://localhost/வணக்கம்.php

3. எல்லாம் சரிவர நிறுவப்பட்டிருந்தால் பிஎச்பி கட்டளைகளை பிஎச்பி இயக்கி
பின்வருமாறு நிரல் இணையஉலாவிக்கு அனுப்பப்படும்
<html>
 <head>
  <title>PHP சோதனை</title>
 </head>
 <body>
 <p>வணக்கம் தமிழா!</p>
 </body>
</html>

உலாவியில் View Source என்ற வசதியைப் பயன்படுத்தி, இந்த மீஉரை (html)
நிரலைப் பார்க்கலாம்.

4. இணைய உலாவியின் திரையில் அது

வணக்கம் தமிழா

என்று காட்டப்படும்.

http://www.php.net/manual/en/tutorial.firstpage.php

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list