[Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?

ஆமாச்சு ramadasan at amachu.net
Tue Jul 27 21:24:20 IST 2010


On Tuesday 27 Jul 2010 4:33:29 pm சுதன் | suthan wrote:
> மாணவர்களிடம் கட்டற்ற மென்பொருள் பற்றி பேசும் பொது எனக்கு எப்போதும் இந்த
> கேள்வி இருந்துள்ளது. மூல நிரலை மாற்றும் உரிமை பற்றி பேசுவதற்கு பதில்
>  ஏதேனும் ஒரு சிறிய மென்பொருளின் மூல நிரலை மாற்றி காண்பிக்கலாமே.
>  மாணவர்களிடம் பேசும் குறுகிய நேரத்தில் ஏதேனும் மென்பொருளின் மூல நிரலை
>  மாற்றி அதனை நிறுவி மாற்றங்களை காண்பிப்பது சாத்தியமா. சாத்தியம் எனில் எந்த
>  மென்பொருளை இதற்கு பயன்படுத்தலாம். அதில் என்னென்ன மாற்றங்களை எளிதில் செய்ய
>  முடியும்.

சாத்தியம் தான். 

உலாவி வழி பயன்பாடுகளை (Browser Based Applications) கொஞ்சம் குடைஞ்சாலே உதாரணத்திற்கு நிறைய சுட்டிக் காட்ட முடியுமே. 

அமைப்போடு (System) விளையாடக் கூடிய பயன்பாடுகளென்றால் (Applications) கொஞ்சம் நேரம் எடுத்து ஒரு உதாரணத்தை செய்து காட்ட 
முடியும்.

இப்படி நிறைய கேளுங்க சுதன். பொதுவா இங்கிலிஷ் மடலாடற் குழுவில் கேட்டா அதைப் பாரு இதைப்பாருன்னு, பாயின்டரை காமிச்சுட்டு போறது சுலபம். இங்கே 
விளக்கம் கொடுக்கணுங்கறது ஒரு தேவையாயிடுது பாருங்க ;-)

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list