Re: [Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Tue Jul 27 22:03:21 IST 2010
27 ஜூலை, 2010 4:33 pm-ல், சுதன் | suthan <83sutha at gmail.com> எழுதியது:
> வணக்கம்,
>
> மாணவர்களிடம் கட்டற்ற மென்பொருள் பற்றி பேசும் பொது எனக்கு எப்போதும் இந்த
> கேள்வி இருந்துள்ளது. மூல நிரலை மாற்றும் உரிமை பற்றி பேசுவதற்கு பதில் ஏதேனும்
> ஒரு சிறிய மென்பொருளின் மூல நிரலை மாற்றி காண்பிக்கலாமே. மாணவர்களிடம் பேசும்
> குறுகிய நேரத்தில் ஏதேனும் மென்பொருளின் மூல நிரலை மாற்றி அதனை நிறுவி
> மாற்றங்களை காண்பிப்பது சாத்தியமா. சாத்தியம் எனில் எந்த மென்பொருளை இதற்கு
> பயன்படுத்தலாம். அதில் என்னென்ன மாற்றங்களை எளிதில் செய்ய முடியும்.
>
வணக்கம் சுதன்,
1. ஆமாச்சு சொன்னது போல இணையப் பக்கங்களை மூல நிரலை மாற்றுவதற்கு
உதாரணமாகக் காட்டலாம். View Source மூலம் html மூல நிரலை திறந்து, அதில்
மாற்றங்கள் செய்து விளைவை செய்து காட்டலாம்.
http://www.google.co.in என்ற பக்கத்தை எடுத்து அதில் கூகுளின் பெயரை
மாற்றிக் காட்டலாம்
2. மற்ற மென்பொருளை எடுத்துக் கொண்டால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக
இருந்தால்தான் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும். முடிந்தால் ஃபயர்ஃபாக்சை
எடுத்து அதன் மூல நிரலை மாற்றி கம்பைல் செய்து மாற்றத்தைக் காட்டலாம்.
More information about the Ilugc.tamil
mailing list