Re: [Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?

மாணிக்கவாசகம் இரா manikk.h at gmail.com
Tue Jul 27 23:43:35 IST 2010


> > ஒரு சிறிய மென்பொருளின் மூல நிரலை மாற்றி காண்பிக்கலாமே. மாணவர்களிடம்
> பேசும்
>

எல்லோருக்கும் வணக்கம்,

நான் மாணிக்கவாசகம். மடற் குழு கலாச்சாரம் எனக்கு ரொம்ப புதுசு. கட்டற்ற
மென்பொருட்களின் மேல் கொஞ்சம் ஆர்வம் உண்டு. என்னோட வலைப்பதிவு -
http://midaru.blogspot.com . நான் பல்லூடக நிரலராகப் பணிபுரிகிறேன். நான்
பயன்படுத்தும் இயங்குதளம் உபுண்டு. இருப்பது போரூர்,சென்னை.

நிச்சமாக செய்துகாட்ட வேண்டும். இப்படிப் பட்ட செய்துகாட்டல்களே மாணவர்களை
கட்டற்ற மென்பொருட்களின் பக்கம் இழுக்கும்.

மா.சி அண்ணன் சொன்னது மாதிரி பரவலாகப் பயன்படும் பயன்பாடாக இருப்பின் மிக்க
நன்று.

பெரும்பாலான கல்லூரிகளில் இன்று .நெட் பாடமாக வைக்கப் பட்டிருக்கிறது.
.நெட்டின் இணையான மோனோ சட்டகத்தினால் (MONO Framework) உருவாக்கப் பட்ட
பயன்பாடுகள் என்றால் அவர்கள் ஆர்வத்துடன் கவனிக்க வாய்ப்பு உள்ளது.

மோனோ சட்டகத்தில் நிரலாக்கப்பட்ட எனக்குத் தெரிந்த பயன்பாடுகள், f-spot மற்றும்
tomboy. மேலும் பயன்பாடுகளுக்கு மோனோ தளத்திற்குச் சென்று பார்வையிடவும். (
http://www.mono-project.com/Software)

கட்டற்ற மென்பொருள் இயக்கம் மோனோ பயன்படுத்தி க்னோம் பயன்பாடுகள் எழுதுவதை
ஊக்குவிப்பதில்லை. அதற்குப் பதிலாக புதிதாக வாலா-சி(VALA-C) என்ற சி#-ப்பிற்கு
ஒப்பான மொழியை உருவாக்கியுள்ளனர்.  இதனைப் பயன்படுத்தியும் நிறைய பயன்பாடுகள்
வரத்தொடங்கிவிட்டன. இன்னும் அந்த மொழி உருவாக்கத்தில்தான் இருக்கிறது. பார்க்க
http://live.gnome.org/Vala#Projects_Developed_in_Vala

இவற்றிலிருந்து ஏதேனும் சின்ன பயன்பாடை எடுத்துக் கொள்ளலாம். முதலில் வீட்டுப்
பாடமாக நாம் அவற்றினைப் பிரித்து மேயக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாலா-சி கற்றுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

வாங்க சேர்ந்து கத்துக்கலாம் :)

அப்புறம் என்னுடைய கேள்வி, கோவையில் பொறியியல் படிக்கும் சில மாணவர்கள்,
தங்களது ப்ராஜெக்ட் (????) விசயமாக என்னிடம் பேசினார்கள். அவர்களை பி.எச்.பி
கற்றுக்கொள்ள சொன்னேன். அவர்களது ப்ராஜெக்ட்டிற்கு வழிகாட்டுதல் வழங்க என்ன
செய்யலாம்? கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள்
கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்படுமா?

மடலில் பிழை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

நன்றி,
மாணிக்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100727/48c3ee55/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list