[Ilugc.tamil] நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆமாச்சு ramadasan at amachu.net
Wed Jul 28 06:44:00 IST 2010


On Tuesday 27 Jul 2010 8:49:00 am சிவகுமார் மா wrote:
> 1. ilugc ஆங்கில மடற்குழுவில் அனுப்பப்படும் பயனுள்ள தகவல்களை தமிழில்
> இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
> 
> 2. உங்களுக்குத் தெரியுமா?
> லினக்சு கட்டளைகள்!
> கட்டற்ற மென்பொருள் வரிசை
> என்று கட்டற்ற மென்பொருட்களை பற்றிய குறிப்புகளை தொடர்களாக அனுப்பலாம் -
> 
> 3. கட்டற்ற மென்பொருட்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடலாம்,
> ஈடுபட மற்ற உறுப்பினர்களை அழைக்கலாம்.
> 
> அ. கேடிஈ பணிச்சூழல் - http://i18n.kde.org/stats/gui/stable-kde4/team/ta/
> ஆ. க்னோம் பணிச்சூழல் - http://l10n.gnome.org/teams/ta
> இ. மோசில்லா - https://wiki.mozilla.org/L10n:Teams:ta
> ஈ. ஓப்பன் ஆஃபிஸ் - http://ta.openoffice.org/
> இன்னும் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள் தமிழ் இடைமுகம், தமிழ் கையேடு
> உருவாகக் காத்திருக்கின்றன.
> 
> 4. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து
> கொள்ளலாம்.
> 
> 5. slashdot.org போன்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விவாதிக்கும்
> தளங்களிலிருந்து தகவல்களை தமிழில் தரலாம்.
> 

6. கட்டற்ற மென்பொருள் தொடர்பான உங்களது ஐயங்களைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.(இது ரிப்பீட்டாகலையே?)

7. யூனிகோடு, w3c போன்ற தொழில்நுட்ப அடிக்கூறுகள் (Standards) தொடர்பான விஷயங்களை தமிழில் பகிர்ந்துகொள்ளலாம்.

--

ஆமாச்சு 


More information about the Ilugc.tamil mailing list