Re: [Ilugc.tamil] மென்பொருள் மாற்றங்கள் உடனே செய்ய முடியுமா?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 06:59:43 IST 2010


27 ஜூலை, 2010 11:43 pm-ல், மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com> எழுதியது:

> நான் மாணிக்கவாசகம்.

வணக்கம் மாணிக்கவாசகம்.

>மடற் குழு கலாச்சாரம் எனக்கு ரொம்ப புதுசு.

தொடர்ந்து எழுதுங்கள். குழுவின் போக்கை உருவாக்குவதில் பங்கு கொள்ளுங்கள்.

> கட்டற்ற மென்பொருட்களின் மேல் கொஞ்சம் ஆர்வம் உண்டு.

கட்டற்ற மென்பொருட்களில் ஆர்வம் மேலும் மேலும் வளரும் என்று எதிர்பார்க்கிறேன் :-)

> என்னோட வலைப்பதிவு - http://midaru.blogspot.com .

உங்கள் வலைப்பதிவில் முதல் கவிதை (மியாவ்) அருமை. மற்றவற்றையும் படிக்கத்
தூண்டுகிறது

> நான் பல்லூடக நிரலராகப் பணிபுரிகிறேன். நான் பயன்படுத்தும் இயங்குதளம் உபுண்டு. இருப்பது போரூர்,சென்னை.

நான் கூட போரூருக்கு அருகில்தான் இருக்கிறேன், ராமாபுரம். உபுண்டு
பயன்படுத்துகிறேன்.

> அப்புறம் என்னுடைய கேள்வி, கோவையில் பொறியியல் படிக்கும் சில மாணவர்கள்,
> தங்களது ப்ராஜெக்ட் (????) விசயமாக என்னிடம் பேசினார்கள். அவர்களை பி.எச்.பி
> கற்றுக்கொள்ள சொன்னேன். அவர்களது ப்ராஜெக்ட்டிற்கு வழிகாட்டுதல் வழங்க என்ன
> செய்யலாம்? கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட்கள்
> கல்லூரிகளில் ஏற்றுக் கொள்ளப்படுமா?

அருளாளன் சொன்னது போல, கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டு பலர்
ப்ராஜெக்ட்கள் செய்திருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் பல மாணவர்கள்
பிஎச்பி பயன்படுத்தியும் ப்ராஜெக்ட் செய்து சமர்ப்பித்தார்கள். ஏற்றுக்
கொள்ளப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list