[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 10:07:45 IST 2010


7. ஜாவாஸ்கிரிப்டு என்ற பூச்சாண்டி

இணைய மென்பொருட்களின் பயனர் இடைமுகத்தை மேம்படுத்தி, எளிதாக செய்வதற்கான
கருவி, இணைய உலாவியிலேயே இயங்கும் நிரல்களுடனான ஜாவாஸ்கிரிப்டு

நெட்ஸ்கேப் நிறுவனத்தால் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து உருவாக்கப்பட்ட
ஜாவாஸ்கிரிப்டு, மைக்ரோசாப்டின் ஒத்துழையாமையினால் இன்னும் உருக்குலைந்து
இணைய மென்பொருட்கள் செய்பவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

ஜாவாஸ்கிரிப்டு - உருப்படியான பகுதிகள்
http://www.youtube.com/v/hQVTIJBZook என்ற இந்த காணொளியை அவசியம்
பாருங்கள். தலைவலியைக் குறைத்துக் கொள்ள ஜேகொரி http://jquery.com/ போன்ற
பொதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list