[Ilugc.tamil] தண்டர்பேர்டு மடல் செயலி - archive எப்படி செயல்படுகிறது?

Pandian R barathee at gmail.com
Wed Jul 28 16:35:17 IST 2010


நண்பர்களே, மோஸில்லா தண்டர்பேர்டு தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

1. மடல்களை அர்க்கைவ் செய்வதால் அதனை வேகமாக செயல்பட வைக்க முடியுமா? ஆர்க்கைவ்
எதர்ற்காக செய்யப்படுகிறது?

2. ஆர்க்கைவ் செய்யும்போது Archieves என்கிற புதிய அடைவு உறுவாகி அதற்குள்
மடல்கள் போய்விடுகின்றன. உதாரணமாக ஒரு மடல் கணக்கில் பல்வேறு அடைவுகள்
(folders) வைத்திருக்கிறோம் என்று வையுங்கள். அவற்றை ஆர்க்கைவ் செய்தாலும் அதே
புதிய அடைவில் சென்றே உட்காருகின்றன. 'தமிழ்' என்கிற அடைவில் உள்ள மடல்களை
ஆர்க்கைவ் செய்தால் Archievesக்குள் 'தமிழ்' என்கிற அடைவில் சென்று சேரும்படி
செய்ய இயலுமா.

லோட்டஸ் நோட்ஸில் இந்த வசதி இயல்பாகவே உண்டு. தவிற ஆர்க்கைவ் செய்த மடல்களை
தனியே ஆர்க்கைவ் மெயில்பாக்சைப் பிடித்துதான் பார்க்கமுடியும் என்பதால் செயலி
வைத்திருக்கும் மடல்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே வேகம் கூடுகிறது.
தண்டர்பேர்டிலும் அப்படி செய்ய இயலுமா?

நன்றி.

Pandian R
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free"
as in "free speech".
Proud user of Ubuntu 10.04 - 64
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/f36de77e/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list