[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 18:09:01 IST 2010


8. தரவுத் தள (Database) செய்கைகளை (transactions) கச்சிதப்படுத்துதல்

பல பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது தகவல்கள் குழப்பம்
இல்லாமல் காண்பிக்கப்பட தகவல் பூட்டல் (locking) செய்து கொள்ளலாம்.

தகவல் ஒன்றை ஒருவர் மாற்றும் போது அதை மற்றவர்கள் அணுக முடியாதபடி பூட்டி
(lock) விடலாம். மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான்
சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்ற பயனர்களுக்கு பார்க்கக் கிடைக்கும்.

இதனால் சில சிக்கல்கள் ஏற்படும். மேம்படுத்தல் முடிவது வரை மற்றவர்கள்
எல்லோரும் காத்திருக்க வேண்டி வரும். மென்பொருள் பயன்படுத்துவது
நடைமுறையில் பலனில்லாமல் போய் விடும்.

இதை சமாளிக்க பல்படி தகவல்பராமரிப்பு (MVCC - Multiversion Concurrency
Control) என்ற அணுகுமுறையைத் பயன்படுத்துகிறார்கள்.

பழைய தகவலை அழிக்கவோ மேலெழுதவோ செய்யாமல், பழையதை காலாவதி என்று குறித்து
விட்டு, புதிதாக ஒரு படியை சேர்த்து விடும் உத்திக்கு பல்படி தகவல்
பராமரிப்பு (mvcc) என்று பெயர்.

பல முறை மாற்றுதலும், அழித்தலும் நடந்தால் ஒரே தகவலுக்கு பல பிரதிகள்
தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும்
நடப்பில் இருக்கும். மற்றவை எல்லாம் காலாவதியானவை என்று
குறிக்கப்பட்டிருக்கும்.

மேலே சொன்ன உதாரணத்தில்,
ராமசாமி, ரூ 700 என்று மாற்றும் போது
1,ராமசாமி, ரூ 750 என்ற தரவை மற்ற செய்கைகளுக்கு நடப்பில் வைத்து விட்டு
1,ராமசாமி, ரூ 700 என்ற புதிய தரவு உருவாக்கப்படும்.

அதன் பிறகு
2, கிருஷ்ணசாமி, ரூ 150 என்ற தரவு உருவாக்கப்படும் (2, கிருஷ்ணசாமி, ரூ
100 என்பது தொடர்ந்து பிற செய்கைகளுக்காக நடப்பில் இருக்கும்)

இரண்டும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு, பணி அலகு முடிந்து விட்டது என்று
அறிந்தவுடன்,
1, ராமசாமி, ரூ 750
2, கிருஷ்ணசாமி, ரூ100
இரண்டும்  காலவதி என்று குறிக்கப்பட்டு
(ஏற்கனவே ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் பணி அலகுகள் பயன்படுத்தும்
வண்ணம் இந்த தரவுகள் நீக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கும்)

1, ராமசாமி, ரூ 700
2, கிருஷ்ணசாமி, ரூ150
என்ற தரவுகள் இனிமேல் ஆரம்பிக்கப் போகும் பணிகளுக்காக நடப்பில் கொண்டு வரப்படும்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.


More information about the Ilugc.tamil mailing list