[Ilugc.tamil] VALA-C - altenative for c#
Rajkumar NRS
tamilan.tamilcpu at gmail.com
Wed Jul 28 22:49:11 IST 2010
//கட்டற்ற மென்பொருள் இயக்கம் மோனோ பயன்படுத்தி க்னோம் பயன்பாடுகள் எழுதுவதை
ஊக்குவிப்பதில்லை. அதற்குப் பதிலாக புதிதாக வாலா-சி(VALA-C) என்ற சி#-ப்பிற்கு
ஒப்பான மொழியை உருவாக்கியுள்ளனர்.
அனைவருக்கும் வணக்கம்,
வாலா-சி பயனுள்ள தகவல். நாமும் மென்பொருட்களை எழுத வணிக தீர்வுகளை
ஊக்கப்படுத்த வேண்டாம். அதனால்தான் தமிழ் இடைமுகப்புடன் விபி நிரல் எழுத
சொல்லித் தர தயங்குகிறேன். மாணவர்களுக்கு பி.எச்.பி, ஜாவாஸ்கிரிப்ட் போன்றவை
எளிதாக இருக்கும். ஜாவாவில் நிரல் எழுதுவது குறித்து தெரிந்தவரை பகிர்ந்து
கொள்கிறேன்.
தமிழில் தட்டச்சு செய்ய ஒரு குறு நிரலை ஜாவாவில் எழுதிப் பார்தேன், அதன் மூல
நிரலையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
http://tamilcpu.blogspot.com/2010/03/blog-post_9419.html
இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்
http://groups.google.com/group/freetamilcomputing. ஜார் கோப்பிற்குள்ளேயே
நிரலும் இருக்கிறது. ஒருங்குறியில் இருப்பதால், எழுத்துக்களை சங்கேத
வார்த்தைகளாக அல்லாமல் (/uxxxx) பார்த்தவுடனே புரிந்து கொள்ளலாம். திறமூல
டெக்ஸ்ட் எடிட்டர் மூல நிரலுடன் எளிதாய் இணைத்துக் கொள்ளலாம்.
நன்றி
அன்புடன்,
ந.ர.செ. ராஜ்குமார்
http://tamilcpu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/f1d8877f/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list