[Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

ஆமாச்சு ramadasan at amachu.net
Thu Jul 29 08:25:29 IST 2010


வணக்கம்

தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் செய்துக்கிட்டிருந்தாலும் சோகமான விஷயம் என்னான்னா பெரும்பாலும் மொழிபெயர்க்கறவங்களே தமிழ் முகப்பை பயன்படுத்தறது 
இல்லைங்கறதுதான். இன்னொரு விஷயம், பயன்படுத்தவறங்க மொழிபெயர்ப்பில் ஈடுபடறது இல்லை. கவலைக்குரிய இன்னொரு விஷயம் யாருக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுதோ 
அவங்ககிட்ட கம்ப்யூட்டரே இல்லை. சரி இதை தனியா அலசலாம்.

இங்க இருக்கறவங்களில் எத்தனை பேர் தமிழ் முகப்பில் - உங்க இயங்குதளத்தை பயன்படுத்தறீங்க? உங்க அடைவுகளில் கொஞ்சத்துக்காவது தமிழில் பெயர் 
வச்சுருக்கீங்க?

நான் அவ்வப்போது தமிழ் முகப்பு பயன்படுத்தறேன். தமிழில் அடைவுகளும் கோப்புகளும் வச்சிருக்கேன்.

எத்தனை பேர் இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் முகப்போட பயன்படுத்த விரும்பறீங்க?

--

ஆமாச்சு





More information about the Ilugc.tamil mailing list