Re: [Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Thu Jul 29 12:55:48 IST 2010


2010/7/29 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> வணக்கம்
>
> தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் செய்துக்கிட்டிருந்தாலும் சோகமான விஷயம்
> என்னான்னா பெரும்பாலும் மொழிபெயர்க்கறவங்களே தமிழ் முகப்பை பயன்படுத்தறது
> இல்லைங்கறதுதான். இன்னொரு விஷயம், பயன்படுத்தவறங்க மொழிபெயர்ப்பில் ஈடுபடறது
> இல்லை. கவலைக்குரிய இன்னொரு விஷயம் யாருக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுதோ
> அவங்ககிட்ட கம்ப்யூட்டரே இல்லை. சரி இதை தனியா அலசலாம்.
>
> இங்க இருக்கறவங்களில் எத்தனை பேர் தமிழ் முகப்பில் - உங்க இயங்குதளத்தை
> பயன்படுத்தறீங்க? உங்க அடைவுகளில் கொஞ்சத்துக்காவது தமிழில் பெயர்
> வச்சுருக்கீங்க?
>
> நான் அவ்வப்போது தமிழ் முகப்பு பயன்படுத்தறேன். தமிழில் அடைவுகளும்
> கோப்புகளும் வச்சிருக்கேன்.
>
> எத்தனை பேர் இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் முகப்போட பயன்படுத்த விரும்பறீங்க?
>
>
ஓரிரு அடைவுகளைத் தவிர மற்றவை ஆங்கிலம் தான்... சீக்கிரம் மாற்றனும்.
தமிழ் முகப்பு பயன்படுத்தனும்னு பல முறை நினைத்ததுண்டு... அதையும் விரைவிலேயே
நிறைவேற்றனும்.

> --
>
> ஆமாச்சு
>
>
>
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/b6d177d3/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list