Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 19:44:13 IST 2010


தியாகுவின் மடலின் தமிழ் மொழிபெயர்ப்பு (தியாகு தமிழில எழுதுனீங்கன்னா
நல்லா இருக்கும் :-)

29 ஜூலை, 2010 6:52 pm-ல், Thiagarajan Pillai <thiagupillai at gmail.com> எழுதியது:

எல்லோரும் பள்ளிகளில் லினக்சு/விண்டோசு பயன்படுத்தலின் மறுபக்கத்தையும்
தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. கணினிகளில் லினக்சு நிறுவப்பட்டு உள்ளது. சமீபத்தில் அதிகாரபூர்வமாக
விண்டோசு 7 வாங்கப்பட்டு தரப்பட்டது

2. லினக்சிலும் விண்டோசு 7லும் C, C++ நிரல்களை தொகுப்பதற்கு இன்னமும்
போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

3. கணினி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவு தம்மால் இயன்றதை எல்லாம்
செய்கிறார்கள் (விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள்)

4. "அவங்க கத்துக்கலை, அதனால் அவங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கக் கூடாது"
என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி சொல்வது என்னைப் புண்படுத்துகிறது.

5. மாணவர்களும் லினக்சு, விண்டோசு இரண்டையும் கற்றுக் கொள்ள
விரும்புகிறார்கள். பார்க்கப் போனால் மற்ற இடங்களில் கிடைக்காததால்
லினக்சில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

6. கிட்டத்தட்ட எல்லா கணினி ஆசிரியர்களும் கற்பிப்பது தொடர்பில்லாத
நிர்வாகப் பணிகளுக்கு அனுப்பப்படுவதால் மாணவர்களுடன் உருப்படியாக நேரம்
செலவழிக்க முடியாத நிலை இருக்கிறது.
(போன கல்வி ஆண்டில் எத்தனை நாட்கள் அவர்கள் ON DUTYல் போனார்கள் என்று பாருங்கள்)

7. பள்ளி மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் புதிதாக எதையும் கற்றுக் கொள்ள
முடியாமல் / விரும்பாமல் / நேரமில்லாமல் இருப்பதால், வேலைப் பளுவின்
காரணமாக கணினி ஆசிரியர்கள் நிர்வாக வேலைகள் பார்க்க வேண்டியிருக்கிறது.

8. பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் லினக்சு இயங்குதளத்தைப் பற்றி தெரிந்து
வைத்திருக்கிறார்கள் என்றுதான் நான் உறுதியாக நம்புகிறேன்.

9. "சில" அலுவலக ஊழியர்கள் கணினி பணிகளில் திறமையாக இருக்கிறார்கள்
என்பது எனக்குத் தெரியும்.

அடுத்த மடலில் தொடரும்

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list