Re: [Ilugc.tamil] 1500 ரூபாய்க்கு கையடக்கக் கணினி - அசத்தலா? அசட்டையா?

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Thu Jul 29 23:47:17 IST 2010


>
> வணக்கம்,
>
> மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் கடந்த வாரம் 1500
> ரூபாய்க்கு கையடக்கக் கணினி வரப்போவதாக அறிவித்து மாதிரி ஒன்றையும்
> காட்டியுள்ளார்.
>
> விரிவான விவரங்கள்
> http://www.linuxjournal.com/content/indias-35-tablet-everything-killer
>
> இதனை கண்ட OLPC திட்டத்தின் நிக்கோலஸ் நேகுரோபான்டே எழுதிய வலைப்பதிவு
> http://blog.laptop.org/2010/07/29/welcoming-indias-tablet/
>
> நீங்க என்ன நினைக்கிறிங்க ?
>

இது ஒரு சவால். ஆனால் சாத்தியமா என்பது அனைவரின் கேள்விக்குறியாகவே உள்ளது.

முதலில்  ம.வ.மே துறை 500 ரூபாயில் மடி கணினி உருவாக்கப்படும் என்று கடந்த
வருடமே செய்தி வெளியிட்டது. இப்போது 1500 ரூபாயாகவுள்ளது. அதன் விலை மற்றும்
குறிப்புகளும்(Tablet SPEC) சரியாக உறிதி செய்யப்படவில்லை. கணினி தயாரிக்கும்
அனைத்து நிறுவனங்களும் இதை பார்த்துக்கொண்டு தான் உள்ளன.

கடந்த வருடம் நான் இது போன்ற ஒரு கணினியை தயாரிக்கும் திட்டத்தில் நான்
செயல்பட்டு வந்தேன். எங்களால் 5000 ருபாய்க்கு குறைவாக தயாரிக்க இயலவில்லை.
அந்த திட்டம் மாதிரி தாயரிப்போடு நின்றுவிட்டது. எனது கருத்துப்படி இதில்
ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் நம் குடிமக்களே(பயன்படுத்தப்படும் பணமும் கொள்ளை
அடிக்கப்படும் பணமும் நம்முடையதே).

இதை சாத்திப்படுத்த கீழ் கண்ட விஷியங்களை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

1. நாம் புதிய சிப்(chip) மற்றும் அதை தயாரிப்பதற்க்கான தொழில் நுட்பத்தை
கண்டுபிடித்திருக்க வேண்டும்.
2. அல்லது இன்டெல், டெக்சாஸ்(TI) , ஆர்ம்(ARM) போன்ற நிறுவனங்கள் மானியமாக
chip களை தந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.


-- 
அன்புடன்
அருண்
|| நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ||
------------------------------
உபுண்டு தமிழ் : http://ubuntu-tam.org
தருமபுரி லினக்ஸ் பயனர் குழு :
http://box434.bluehost.com/mailman/listinfo/thahadoorlug_yavarkkum.org
உபுண்டு தமிழ் பயனர் குழு : http://list s.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/cb88a6c8/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list