Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்

Pandian R barathee at gmail.com
Fri Jul 30 12:05:45 IST 2010


>
> 4. "அவங்க கத்துக்கலை, அதனால் அவங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கக் கூடாது"
> என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி சொல்வது என்னைப் புண்படுத்துகிறது.
>
அன்பின் நண்பர் தியாகராஜன்,

தாங்கள் வருத்தப்பட இதை நான் எழுதவில்லை. தங்கள் மனம் வருத்தப்பட்டால்
மன்னிக்கவும். எனது சகோதரர் பள்ளிக்குச் சென்று மற்றும் சக பள்ளிகளின் நிலை
பற்றி அவர் கூறியதையும் வைத்தே நான் எழுதினேன்.

கண்டிப்பாக கத்துக்கிறாரகள். எனது சகோதரரும் லினக்சை எடுத்துவிட்டு விண்டோஸ்
நிறவச் சொல்லாமா என்று கேட்டபோதுதான் லினக்சில் சி, சி++ கம்ப்பைலர்
பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினேன். ஆனால் சக ஆசிரியர்களும்
அப்படித்தான் என்று கூறமுடியவில்லை. வெறும் தியரியை நடத்தும் ஆசிரியர்களும்
இருப்பதாகக் கூறுகிறார்கள். நினைத்துப் பாருங்கள். கிராமத்தில் உள்ள ஒருவனிடம்
மதியம் இரண்டாவது பீடியடு திடீரென்று சி கம்ப்பைலரை தூக்கிக் கொடுத்தால் என்ன
ஆகும்??

எங்களுக்கான கல்வி வழி சரியானதாக இருந்ததென்று நினைக்கிறேன். டாஸ் - பேஸிக் -
போர்ட்ரான் - யூனிக்ஸ்.. கற்றுக்கொள்ள நேரம் கிடைத்தது. அதற்காக அதே வழி
போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் திட்டமிடல் அதுபோன்றாவது
இருக்கவேண்டும். தற்சமயம் மாணவர்கள் தலையில் பெரிய சுமை உள்ளது. சுமை நீக்க
வேண்டிய ஆசிரியர்களும் அதே சுமையைச் சுமக்கிறார்கள்.

இவற்றைப் போன்ற லினக்ஸ் பயனாளர் குழுமங்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தவிற வேறு ஆக்கப்பூர்வ வழியிருப்பதாய் தெரியவில்லை.

நான் விரும்புவது மாவட்டத்திற்கு ஒரு லினக்ஸ் பயனாளர் குழுமங்கள் உருவாக
வேண்டும் (தற்போது இருக்கின்றன பேருக்கு. அல்லது ஒருவரின் ஆர்வப்படி சில
இடங்களில் நடந்து வருகிறது. அவர் ஊரை விட்டுப் போய்விட்டால் ஊத்தி மூடி
விடுகிறது). தவிற அனைவருக்கும் இதன் சாரம் போய் சேர்ந்து ஒரு மக்கள் இயக்கமாக
வளர வேண்டும்.


>
> 5. மாணவர்களும் லினக்சு, விண்டோசு இரண்டையும் கற்றுக் கொள்ள
> விரும்புகிறார்கள். பார்க்கப் போனால் மற்ற இடங்களில் கிடைக்காததால்
> லினக்சில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
>
அப்படி ஆர்வம் இருப்பின் மகிழ்ச்சியே.

தவிற அலுவலகப் பணிகள் உள்ளது உண்மைதான். ஆனால் கேள்வி என்றால்... பாடம்
விண்டோஸ்.. ஆய்வகம் லினக்ஸ் (சில இடங்களில் திருட்டு விண்டோஸ்).. பரீட்சைக்கு
வழி? gcc கட்டளையை எழுதினால் தேர்வில் மதிப்பெண் கிடைக்குமா?

எளிதான வழி.
வேதியியல் ஆய்வகப் பரீட்சையில் டைட்ரேஷன் என்பது அனைத்துப் பள்ளிகளும் ஒரே
மாதிரியாக உள்ளது. எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வருவார் கையெழுத்துப் போடுவார்.
தவிற, திருட்டு விண்டோஸ் போட்ட ஆசிரியர் லினக்ஸ் வழி கற்பிக்கும் பள்ளிக்கு
எ.எ.வாகப் போனால் பசங்க நிலை என்ன? இதை சரி செய்ய வேண்டியது அவசியம் என்றுதான்
கூறுகிறேன். தவிற ஆசிரியர்களைக் குறை கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டுகிறேன்.

பதிலுரைக்கு நன்றி.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100730/7ed3621c/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list