[Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Sat Jul 31 11:55:58 IST 2010
10. PHP பதிப்பு 3.xல் பொருள் (ஆப்ஜெக்ட்) பயன்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சார்புநிலை (associative) அணிகளுக்கு (array) ஒரு கூடுதல் சேர்க்கையாகவே
இது கருதப்பட்டது. முழுமையான பொருள் சார்ந்த மென்பொருள் உருவாக்க (object
oriented programming) முறையைப் பற்றி யாரும் கவலைப்பட்டிருக்கவில்லை.
பெரிய மென்பொருள் திட்டங்களில் பிஎச்பியின் பொருள் சார்ந்த மென்பொருள்
உருவாக்க முறையில் இருந்த குறைபாடுகள் பெரிதாக உணரப்பட்டன். PHP பதிப்பு
5.0ல் இந்த பொருள் அமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு பொருள் சார்ந்த
மென்பொருள் உருவாக்கத்துக்கான கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த பிஎச்பி நிரல் எழுதி இணையப்
பயன்பாடுகளை உருவாக்குவது சாத்தியமாகியிருக்கிறது. புதிதாக பிஎச்பி
கற்றுக் கொள்பவர்கள் பிஎச்பி 5ன் பொருள் சார்ந்த உருவாக்க அணுகுமுறையைப்
பயன்படுத்தினால் மென்பொருளின் நிரல் அளவு பெரிதாகும்போது பராமரிப்பது
எளிதாக இருக்கும்.
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
குறிப்பு
LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.
அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.
More information about the Ilugc.tamil
mailing list