[Ilugc.tamil] எத்தனை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Jul 31 16:21:46 IST 2010


On Saturday 31 Jul 2010 11:15:09 am Pandian R wrote:
> பயன்படுத்தக் கடினமாக இருந்தது. என் தவறாகவும் இருக்கலாம் :(
> பிழை இருப்பின் அதில் எனக்கும் பங்கு உண்டு!!
> 

இப்போ சில நேரங்களில் தமிழ் முகப்பில் மெனுக்கள் அகலமாக இருக்கின்றன.

இடத்திற்கேற்றாற் போல் சில சொல்லுக்கு பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எழுத்துப் பிழைகளை காண நேரிடுகிறது.

இவை எனக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள்.

இதை எப்படி களையலாம்?

தமிழ் முகப்பை பயன்படுத்தி ஊக்குவித்து பிழைகளை மொழிபெயர்ப்போருக்கு தெரியபடுத்த வேண்டும்.
 
நிறைய பேர் அவ்வப்போவாவது தமிழ் முகப்பை பயன்படுத்தி முறையிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் தெரியும்.

பயன்படுத்துவோரே மொழிபெயர்க்கணும்.

உங்களோட கருத்துக்கள்?

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list