[Ilugc] [தமிழ்] தமிழ் விசைப்பலகை

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Aug 12 13:17:34 IST 2007


On Sunday 12 August 2007 12:08:19 Kenneth Gonsalves wrote:

>
> [trans: i just discovered tam99 keyboard in my ibook and am
> practicing typeing tamil. The subject of this thread is the
> availability of tamil keyboards and whether it is possible to
> manufacture a skin for tam99 keyboard] 

இதற்கான  விசையுறை  (skin) செய்வது  நல்லது!  டி.வி.எஸ் நிறுவனம் இவ்வடிவத்தினாலான விசைப் 
பலகையினை  வெளியிட்டு வருகிறது.. அதன் விலை  ஆறேழு  மாதங்களுக்கு முன் ரூ  450/-

> For those who came in late - 
> tam99 keyboard enables one to type all the tamil letters without
> using the shift key.


சிந்தாநதின்னு ஒரு  வலைப் பதிவர்.. நடந்து முடிந்த வலைப் பதிவர் பட்டறையில் தமிழ்99  விசைப் 
பலகை  வடிவத்தின் சிறப்புகளைச்  சுட்டி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்...

ஏன் தமிங்கில தட்டச்சு  கூடாது என்பதற்கு http://amachu.net/blog/?p=41 அணுகவும்.

தமிழ்99  Shift  விசையின்  துணையில்லாது தமிழ் எழுத்துக்கள் 
தட்டெழுத உதவும்.  கிரந்த எழுத்துக்கள் மற்றும் ஃ மட்டுமே  Shift  தேவைப் படும்.

ஆங்கில தட்டச்சினை  சாராததால்  இது  இயற்கையானது.  தமிழ் எழுத ஆங்கிலம்  அறிய வேண்டிய 
அபத்தத்தினைத் தகர்க்கிறது!

இடது புறம்  உயிரெழுத்தும் வலது புறம் மெய்யெழுத்தும் இருப்பதால் சிறிது  காலம்
பழகினாலே நமக்கு வேகம் கொடுக்கக் வல்லது. சட்டென்று நினைவிலும் நிற்கும்.

மேலும்  Short Cut விசைகள் வடிவமைப்பதிலும் இது துணைபுரியும்.  தமிழில் நிரல்கள் எழுதி 
சில செயல்களை  செய்ய Short Cut விசைகள் கொடுப்பதில்  இதனை  அடிப்படையாகக் கொள்ளலாம்.

உதாரணம் Alt+க  --> காக்க  -->  To Save

பழகினால்  அதிக  வேகம் கொடுப்பது இதுவாகத்  தான் இருக்கும்..  phoentic ல்  k+a = க.. 
k+a+u = கௌ .. இவை  தமிழ்99 ல் முறையே  ஒன்று மற்றும் இரண்டு விசைகளை  அழுத்துவதின் மூலம் 
சாத்தியமாகும்..

இன்னும் பல  இருக்கலாம்.. அறிந்தவர்கள்  சொல்லுங்க...  

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the ilugc mailing list